Video: எல்லாமே 'முடிஞ்சிருச்சு' என் தப்பு எதுவுமே இல்ல... கதறியழுத நடிகை!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்தவர் ஜனனி அசோக் குமார். அந்த சீரியலில் அகிலாண்டேஸ்வரி வீட்டின் 2-வது மருமகள் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஜனனியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அந்த தொடரில் தன்னுடைய நடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ஜனனி தெரிவித்து இருக்கிறார். வீடியோ ஒன்றில் ஜனனி அழகுக் குறிப்புகள் சொல்லிக்கொண்டு இருக்கும்போது அவருக்கு செம்பருத்தி டீமில் இருந்து திடீரென போன் வருகிறது. தொடர்ந்து அமைதியாக இருக்கும் அவர் நான் நெனைச்சா இதை சொல்லாம மறைச்சு இருக்கலாம்.
ஆனா சொல்லணும்னு தோணுது. இனிமே அந்த கேரக்டர்ல நான் நடிக்க மாட்டேன். எனக்கு பதிலா யார் நடிச்சாலும் உங்க ஆதரவை கொடுங்க என சொல்கிறார். என்றாலும் திடீரென தன்னை நீக்கியதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தாங்க முடியாமல் கதறியழுகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் கவலைப்படாதீங்க உங்களுக்கு நல்லது நடக்கும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.
VIDEO: எல்லாமே 'முடிஞ்சிருச்சு' என் தப்பு எதுவுமே இல்ல... கதறியழுத நடிகை! வீடியோ