என்ன அசால்ட்டா flight ஓட்டுறாரு… வைரலாகும் பிரபல நடிகரின் mass வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் வினய் தனது நடிப்புத் திறனால் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார்.

Actor vinay flight driving mass video went viral

அறிமுகம்…

தமிழ் சினிமாவில் ’உன்னாலே உன்னாலே’ திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் வினய். அந்த படத்தை மறைந்த இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ஜீவா இயக்கி இருந்தார். அந்த படம் பெற்ற வெற்றியை அடுத்து வினய் பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் வில்லனாக முதலில் நடித்த துப்பறிவாளன் திரைப்படம் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.

Actor vinay flight driving mass video went viral

வில்லன் வேடம்…

துப்பறிவாளன் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடித்த ’டாக்டர்’ திரைப்படத்தில் வினய் வில்லனாக நடித்திருக்கிறார். அந்த படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் அவர் சூர்யா நாயகனாக நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக தோன்றியிருந்தார். இப்படி ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

Actor vinay flight driving mass video went viral

வில்லனாக நடிப்பது ஏன்?

டாக்டர் படத்தில் வில்லனாக நடித்தது பற்றி சமீபத்தில் பேசிய அவர், “வில்லன் நடிகரோ.. ஹீரோ நடிகரோ.. நாம் நடிப்பதை விரும்பி செய்ய வேண்டும். அவ்வளவுதான்” என்று குறிப்பிட்டு இருந்தார். அத்துடன் தொடக்ககாலத்தில், விஸ்கி கம்பெனி மற்றும் வங்கிகளில் எல்லாம், தான் பணி புரிந்ததாகவும், ஆனால் ஒரு அறைக்குள் அமர்ந்து வேலை செய்யும் முறை மற்றவர்களுக்கு எப்படியோ தனக்கு உடன்பாடு இல்லாததால், அதில் இருந்து வெளியேறி விட்டதாகவும், பிறகு சினிமா என்று வந்தபோது சினிமாவை விரும்பி லவ் பண்ணி நடிக்க தொடங்கி விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

Actor vinay flight driving mass video went viral

வைரல் வீடியோ…

இந்நிலையில் வினய் சம்மந்தமான வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறிய ரக விமானம் ஒன்றை அவர் ஸ்டைலாக ஓட்டியுள்ளார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

Tags : Vinay, Actor, Flight

தொடர்புடைய இணைப்புகள்

Actor vinay flight driving mass video went viral

People looking for online information on Actor, Flight, Vinay will find this news story useful.