www.garudabazaar.com

விஜய்யின் செம க்யூட் வீடியோவை பகிர்ந்த நடிகர் ஶ்ரீமன்.! ''நீ வேற லெவல் நண்பா..'' என உற்சாகம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் க்யூட் வீடியோவை பகிர்ந்த நடிகர் ஶ்ரீமன், அதுகுறித்து உற்சாகமாக பதிவிட்டுள்ளார். 

ஶ்ரீமன் பகிர்ந்த விஜய்யின் வீடியோ | Actor Sriman Shares a Cute Positive Video edit of Vijay

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஷாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள், ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஹிட் அடித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

ஶ்ரீமன் பகிர்ந்த விஜய்யின் வீடியோ | Actor Sriman Shares a Cute Positive Video edit of Vijay

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், குணச்சித்திர நடிகருமான ஶ்ரீமன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். முழுக்க முழுக்க பாசிட்டிவிட்டியை சொல்லும் விஜய்யின் இந்த க்யூட் வீடியோ பகிர்ந்த ஶ்ரீமன், ''நீ வேற லெவல் நண்பா..இந்த வீடியோவை என் நண்பரின் ஸ்டேடஸில் பார்த்தேன். உனது க்யூட் எக்ஸ்ப்ரஷன்களை தாண்டி, இதில் சொல்லப்பட்டு கருத்து என்னை மிகவும் கவர்ந்தது. இந்த பாசிட்டிவிட்டியுடன் எஸ்.பி.பி சாருக்கான கூட்டு பிரார்த்தனையில் ஈடுபடுவோம். கொரோனாவில் இருந்து மீண்டு, உலகம் உருவாகட்டும்'' என அவர் பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

ஶ்ரீமன் பகிர்ந்த விஜய்யின் வீடியோ | Actor Sriman Shares a Cute Positive Video edit of Vijay

People looking for online information on Master, SPB, Sriman, Vijay will find this news story useful.