நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 19-வது படம்... அனிருத் இசை.. லைகா நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு வெளியானது. பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். திரு. சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் "டான்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்க, பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார்.

Actor Sivakarthikeyan join hands with lyca நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 19-வது படம்

இத்திரைபடத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, இதன் அதிகாரபூர்வ வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் காலை 11மணிக்கு வெளியிட்டது லைகா நிறுவனம். இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் வெளியான சில மணி நேரத்திலேயே சமூக வலைதளங்களில் இந்த செய்தி வைரலாகி வருகிறது.

Actor Sivakarthikeyan join hands with lyca நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 19-வது படம்

நடிகர் சிவகார்த்திகேயன் இதற்கு முன்பாக  'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'அயலான்'. நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ரகுல் பிரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் கருணாகரன் யோகிபாபு போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வாரம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

Actor Sivakarthikeyan join hands with lyca நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 19-வது படம்

People looking for online information on Sivakarthikeyan will find this news story useful.