"ஒரு படமே எடுத்தேன்".. சீட்டாட்டம் & ஆன்லைன் ரம்மி குறித்து நடிகர் ராஜ்கிரண் பதிவு!
முகப்பு > சினிமா செய்திகள்ஆன்லைன் ரம்மி மற்றும் சீட்டாட்டம் குறித்து நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Also Read | "விஜய்யின் 'வாரிசு'.. கூடுதல் தியேட்டர் வேணும்".. உதயநிதியை சந்திக்கும் தில் ராஜூ?
தமிழக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் நிறைவேறியது. மேலும் இந்த அவசர சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்க வேண்டி உள்ளது. சமீபத்தில் ஆளுநரை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மசோதாவைக் விரைவில் பரிசீலிப்பதாக ஆளுநர் ரவி கூறியதாக தகவலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் ராஜ் கிரண் தனது முகநூல் பக்கத்தில், ""சீட்டாட்டம்" என்பது, மிக மிக மோசமான சூது. சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம்...
சீட்டாட்டத்தினால் ஏற்படும் வெறியும், போதை போன்ற மயக்கமும் அந்தப்பழக்கத்தை தொட்டவரை விடவே விடாது...
சீட்டாட தேவைப்படும் பணத்துக்காக எவ்வித கீழ்நிலைக்கும் போவதற்கு தயங்கமாட்டார்கள், அதற்கு அடிமையானவர்கள்... இதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான், "எல்லாமே என் ராசா தான்" என்று, ஒரு படமே எடுத்தேன்... அந்தக்காலகட்டங்களில் சீட்டாடுவது சட்டப்படி குற்றமாயிருந்தது. "காவல் துறை கைது செய்தால் கேவலமாகிவிடுமே" என்ற பயமும் இருந்தது. ஆனால், இப்போது சீட்டாட்டம் டிஜிட்டல் மயமாகி, "ஆன்லைன் ரம்மி" என்ற பெயரில், காவல் துறையைப்பற்றிய பயமில்லாமல், எல்லோரும் ஆடலாம் என்றாகி, இந்த சமூக சீர்கேட்டிற்கு, பிரபலங்கள் எல்லாம், பாமர மக்களை, ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு, கூவிக்கூவி அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
இதுவரை நம் தமிழ் நாட்டில் மட்டும் 37 உயிர்கள் பலியாகியிருக்கின்றன... 37 குடும்பங்கள் பரிதவித்துக்கிடக்கின்றன. தமிழக அரசு, இந்த நாசகார, உயிரோடு விளையாடும் விளையாட்டைத்தடுக்க சட்டம் இயற்றியும், அதை செயல் படுத்த முடியாமல், முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன..." என ராஜ் கிரண் பதிவிட்டுள்ளார்.
Also Read | தான் நடித்த சீரியல் டைரக்டரின் மரணம்.! கலங்கிய நடிகை பிரியா பவானி சங்கர்.. உருக்கமான பதிவு