www.garudabazaar.com

பிக்பாஸ் சீசன் 4-ன் அதிரடி புரொமோவை வெளியிட்ட விஜய் டிவி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிந்தி மற்றும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் புரோமோ வெளியாகி அம்மொழி ரசிகர்களை மகிழ்வித்தது. இதனையடுத்து தமிழ் பிக்பாஸ் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே எழுந்தது.

actor Kamal Haasan's Bigg Boss season 4 promo is out ft Vijay TV | கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் பிக்பாஸ் 4 புரோமோ

தமிழ் பிக்பாஸ் புரொமோ படமாக்கப்பட்டுவிட்டது எனவும், இன்னும் இரண்டு தினங்களில் வெளியாகும் எனவும் Behindwoods சார்பாக தெரிவித்திருந்தோம். அதன் படி இன்று(27/08/2020) பிக்பாஸ் புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

அதில் செம ஸ்டைலிஷாக தோன்றும் கமல்ஹாசன், ''நோய் ஆபத்தானது தான். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தான். அதற்காக வீட்டிலேயே வேலையில்லாமல் இருக்க முடியாது. உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் படி பாதுகாப்பாக இருப்போம். இதோ நான் வந்துட்டேன். நீங்களும் வேலையை தொடங்குங்கள். நாமே தீர்வு. வேலையை ஆரம்பிக்கலாமா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிக்பாஸ் விரைவில் என்ற அறிவிப்பும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 4-ன் அதிரடி புரொமோவை வெளியிட்ட விஜய் டிவி வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

actor Kamal Haasan's Bigg Boss season 4 promo is out ft Vijay TV | கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் பிக்பாஸ் 4 புரோமோ

People looking for online information on Bigg Boss 4, Kamal Haasan, Vijay tv will find this news story useful.