www.garudabazaar.com

நடிகர் ஜெய்.. சண்டைக்காட்சி ஷூட்டிங்கின் போது காயம்.. ஆனாலும் தொடர்ந்த ஷூட்.. என்ன நடந்தது?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெய்.

actor jai injured in stunt sequence but shoot resumed

அவரது இயல்பான நடிப்பிற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு . ஆனால் இவை அனைத்தையும் தாண்டி, தனது தொழிலில் அவர் காட்டும் அர்ப்பணிப்பும், உழைப்பும் தான் ரசிகர்கள், தயாரிப்பளார்கள் மற்றும் இயக்குனர்கள் மத்தியில் அவரை மிகவும் பிடித்தமான நபராக மாற்றியுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் சுந்தர்.C தயாரிப்பில், ஜெய் நடிப்பில், பத்ரி இயக்கும் படத்தின் சண்டை காட்சிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. அந்த காட்சிகள், மிகவும் ஆபத்தானது என்பதால், பலத்த முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, படமாக்கப்பட்டது.

                                            (கோப்புப் படம்)

அதில் ஜெய் ஒரு மேஜையை உடைக்கும்படியான காட்சிகளும் இருந்தன. அதனை படமாக்கும் போது, எதிர்பாராத விதமாக, ஜெய்-உடைய தோள்பட்டை இடம்பெயர்ந்தது. அவரைப் பரிசோதித்த பிசியோ தெரபி குழு, அவரை ஓய்வெடுக்க சொன்னபோதும், அதை பொருட்படுத்தாமல், படக்குழுவின் நலன் கருதி, மீதியுள்ள ஆபத்தான காட்சிகளையும் தானே முயன்று நடித்து முடித்துகொடுத்தார். இந்த தேதிகளை தவறவிட்டால், படக்குழு மீண்டும் இந்த இடத்தில் படபிடிப்பு நடத்துவதற்கான அனுமதியை பெற முடியாது என்பதை, மனதில் வைத்து இந்த முடிவை எடுத்தார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், “ஆமாம் .. சண்டைக் காட்சியின் போது முற்றிலும் எதிர்பாராத விபத்து நடந்தது .. ஆனால் பணிகள் தொடர வேண்டும் .. எனவே  பிசியோதெரபி எடுத்துக்கொண்டு உடனடியாக வேலை தொடங்கப்பட்டது…” என குறிப்பிட்டுள்ளார். 

actor jai injured in stunt sequence but shoot resumed

நடிகர் ஜெய்யின் இந்த அர்ப்பணிப்பை பார்த்து, மொத்த படக்குழுவும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தது. நடிகர் ஜெய் நடிப்பில், கோபி நயினார் இயக்கும் பெயரிடபடாத ஒரு படம், இயக்குனர் அட்லி எழுதி, தயாரித்து, அவரது உதவியாளர் இயக்கும் ஒரு படம் உட்பட, பல படங்கள் தயாரிப்பின் பல்வேறு நிலைகளில் உள்ளது. அப்படங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

ALSO READ: "இந்த விஷயம் தான் குழப்பமா இருந்துச்சு".. யோகிபாபுவுடன் நவரசாவில் கலக்கும் ரம்யா நம்பீசன்.!

Tags : Jai

actor jai injured in stunt sequence but shoot resumed

People looking for online information on Jai will find this news story useful.