'கலகலப்பாகவும், கிளுகிளுப்பாகவும்...' - 'இருட்டு அறையில் முரட்டு குத்து 2' குறித்து பிரபல நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2018 ஆண்டு காமெடி கலந்த பேய் படமாக வெளியான திரைப்படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்த படத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, ஷாரா உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர்.

Actor Chaams tweets about Iruttu Arayil Murattu Kuththu Part 2

இப்படத்தை படத்தை 'ஹர ஹர மஹா தேவகி', 'கஜினிகாந்த்' படத்தை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயகுமார் இயக்கி இருந்தார். இதனையடுத்து இதன் இரண்டாம் பாகம் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 என்ற பெயரில் தயாராகி வருகிறது.

இந்த படத்தில் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமாரே ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த படம் குறித்து காமெடி நடிகர் சாம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், இயக்குநரும் நடிகருமான ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், இருட்டு அறையில் முரட்டு இரண்டாம் பாகத்தில் நாங்கள்... கலகலப்பாகவும் கிளுகிளுப்பாகவும் தயாராகி வருகிறது'' என்று தெரிவித்தார்.