www.garudabazaar.com

பரத் - வாணி போஜன் நடிக்கும்... "ஓ மை கடவுளே! தயாரிப்பாளரின் புதிய படத்தின் செம அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2020 ஆம் ஆண்டு அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், சந்தோஷ் பிரதாப் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

actor bharath vaani bhojan new movie shooting update

இப்படத்தை தயாரித்த ஆக்ஸெஸ் ஃபிலிம் ஃபாக்டரி நிறுவனம் தற்போது பரத், வாணி போஜன், கே.எஸ் ரவிக்குமார் நடிக்கும் Production No - 12 எனும் பெயரிடப்படாத படம் ஒன்றை தயாரிக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் எம்.சக்திவேல் இயக்கவுள்ளார். திரில்லர் வகைமையில் இந்தப்படம் தயாராகிறது. 

actor bharath vaani bhojan new movie shooting update

நடிகர் பரத் நடிப்பில்  2019-ஆம் ஆண்டு வெளியான ’காளிதாஸ்’ படமும் திரில்லர் வகைமையில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  அதனைத்தொடர்ந்து, பிரபுதேவா இயக்கத்தில் இந்தியில் சல்மான் கானுடன் ‘ராதே’ படத்தில் நடித்திருந்தார். 

actor bharath vaani bhojan new movie shooting update

வாணி போஜனும், தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக ‘பாயும் ஒளி நீ எனக்கு’, சசிகுமாருக்கு ஜோடியாக ‘பகைவனுக்கு அருள்வாய்’ என பிஸியாக வலம் வருகிறார்.

actor bharath vaani bhojan new movie shooting update

பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை கடந்த ஏப்ரலில் சென்னையில் நடைபெற்றது. கொரோனா காரணமாக தாமதமான படப்பிடிப்பு தற்போது மீண்டும் தென்காசியில் ஆரம்பமாகி உள்ளது.

actor bharath vaani bhojan new movie shooting update

இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி, திருநெல்வேலி, அம்பை, சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

actor bharath vaani bhojan new movie shooting update

People looking for online information on Bharath, Oh My Kadavule, Vani Bhojan will find this news story useful.