தடம் படத்தின் இந்தி ரீமேக்.. திடீர் விசிட் அடித்த அருண் விஜய்! தீயாய் பரவும் போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தி போன்ற மற்ற இந்திய மொழிகளில் ரீமேக் செய்வது வாடிக்கையான ஒன்று.

Actor Arun Vijay Meets Tadam Hindi Remake Team Mrunal Thakur

Also Read | 5 மொழிகளில் விக்ரம் படத்தின் சேட்டிலைட் TV உரிமம்.. கைப்பற்றிய முன்னணி சேனல்கள்! முழு தகவல்

2019 ஆம் ஆண்டில் வெளியான மகிழ் திருமேனி இயக்கிய 'தடம்' படத்தில், அருண் விஜய், தான்யா ஹோப் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஆக்‌ஷன்-த்ரில்லர் வகைமையில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் தெலுங்கில் 'ரெட்' என ரீமேக் செய்யப்படுகிறது, ராம் பொத்தினேனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Actor Arun Vijay Meets Tadam Hindi Remake Team Mrunal Thakur

இப்போது, ​​'தடம்' படத்தின் இந்தி ரீமேக் அறிவிக்கப்பட்டு, பிரபல ஹீரோ ஆதித்யா ராய் கபூர், அருண் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பூஷண் குமாரின் டி சீரிஸ் பிலிம்ஸ் மற்றும் முராத் கெதானியின் சினி 1 ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு வர்தன் கேத்கர் இயக்குனராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது.

Actor Arun Vijay Meets Tadam Hindi Remake Team Mrunal Thakur

இந்நிலையில் நடிகர் அருண்விஜய் தடம் இந்தி ரீமேக் படக்குழுவை மும்பையில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பில் பட தயாரிப்பாளர், நடிகை மிருணாள் தாகூர், இயக்குனர் வர்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

Actor Arun Vijay Meets Tadam Hindi Remake Team Mrunal Thakur

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

தடம் படத்தின் இந்தி ரீமேக்.. திடீர் விசிட் அடித்த அருண் விஜய்! தீயாய் பரவும் போட்டோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Arun Vijay Meets Tadam Hindi Remake Team Mrunal Thakur

People looking for online information on Arun Vijay, அருண் விஜய், இந்தி ரீமேக், தடம், Mrunal Thakur, Tadam Hindi Remake will find this news story useful.