www.garudabazaar.com

ஆக்ஷன் திரில்லர் "குறுக்கு வழி" திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “குறுக்கு வழி”. இப்படத்தை N.T. நந்தா எழுதி, இயக்கியுள்ளார்.  K.சிங் மற்றும் A ஷர்மா இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் துருவா, பிரனய் காளியப்பன், சினேகன், சாக்‌ஷி அகர்வால், ஷிரா கார்க் மற்றும் மிப்பு ஆகியோர் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். படத்தை எழுதி இயக்குவது மட்டுமின்றி, N.T.நந்தா ஒளிப்பதிவு செய்து இசையமைத்துள்ளார். 

 

 

Action thriller kuruku vazhi movie First look released

இந்த படம் குறித்து, N.T.நந்தா கூறுகையில், “நான் இதற்கு முன்பு 2017ல் வெளியான வல்ல தேசம் என்ற தமிழ்ப் படத்தைத் இயக்கினேன். அந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது நான் 120 ஹவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தை இயக்கி வருகிறேன், அதற்கு நான் ஒளிப்பதிவும், செய்துள்ளேன். நாங்கள் இப்படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டோம்,  2022ல் இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகளை செய்து வருகிறோம். இதற்கிடையேயான தருணத்தில் தான் , ‘குறுக்கு வழி’ என்ற தமிழ்த் திரைப்படத்தை  உருவாக்கத் துவங்கினோம். தமிழ் சினிமாவை சர்வதேச தரத்திற்கு இணையாக, தொழில்நுட்ப மற்றும் கதை அம்சங்களில் உருவாக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவு. லண்டனைச் சேர்ந்த K சிங் மற்றும் A ஷர்மா தமிழ் திரைப்படம்  தயாரிக்க முழு ஆர்வம் காட்டியது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. அடுத்தடுத்து  எனது இயக்கத்தில் உருவாகவுள்ள திரைபடங்களை அவர்களே தயாரிக்கிறார்கள். படத்தின் டீசரை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம், டீசர் எங்களின் உழைப்பை இப்படத்தின் முழுப்பெருமையையும் வெளிப்படுத்தும் என நம்புகிறேன் என்று கூறினார்.

Action thriller kuruku vazhi movie First look released

பாடலாசிரியர் மற்றும் நடிகர் சினேகன் இப்படத்தை பற்றி கூறியதாவது, “ இந்த திரைப்படத்தில் இணைந்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சி, இந்த படத்தில் நான் இணைந்ததற்கு காரணம் இயக்குனர் நந்தா தான். லண்டனில் பிசியாக இருக்கும் நந்தா, தமிழ்நாட்டிற்கு வந்து நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறார். அவர் எல்லா துறைகள் பற்றியும் அறிந்தவர்,  அதை எளிமையாக கையாள தெரிந்தவர். இயக்குவதை தாண்டி, ஒளிப்பதிவையும் கவனித்துள்ளார்.  இந்த படத்தில் நான் பாடல் வரிகள் எழுதியுள்ளேன் மற்றும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளேன். படத்தின் முதன்மை கதாபாத்திரம் திருடனாக வரும், அப்போது நல்லவனாக இருக்கும் ஒருவன், இவர்களை சந்தித்த பிறகு என்ன ஆகிறான், அவன் நல்லவனா கெட்டவனா என ஊசலாடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

Action thriller kuruku vazhi movie First look released

நடிகை ஷிரா காக் கூறுகையில், “இந்த ஃபர்ஸ்ட் லுக்கின் மூலம் எங்கள் படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பைப் பார்க்கும்போது, மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த திரைப்படம் தனிப்பட்ட முறையில் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. இந்த பர்ஸ்ட் லுக் படத்தின் தரம் மற்றும் ஒரு குழுவாக நாங்கள் உழைத்த கடின உழைப்பையும் பிரதிபலிக்கிறது. இப்படம்  ரசிகர்களால் நிச்சயமாக  பாராட்டப்படும் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம். சினேகன் கேரக்டரைப் போலவே, என் கதாபாத்திரமும் அழுத்தமாக இருக்கும். கடந்த இரண்டு வருடங்களாக இயக்குநர் நந்தாவின் உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் கடும் உழைப்பை நான் பார்த்து வருகிறேன். தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத அம்சங்களில் அவருடைய திறமையை பார்த்து நான் அடிக்கடி வியப்படைந்திருக்கிறேன். இந்த திரைப்படத்தில்  அவர் மிகவும் ஆர்வத்துடன் உழைத்துள்ளார்.தயாரிப்பு - K. சிங், A ஷர்மா, எழுத்து, இயக்கம், இசை, ஒளிப்பதிவு - N.T.நந்தா, எடிட்டர் - R.S.அக்னி, கலை - ஆரோக்கியராஜ், ஸ்டண்ட்ஸ் - கத்தி நரேன், பாடல் வரிகள் சினேகன், சீர்காழி சிற்பி, தயாரிப்பு நிர்வாகி - K.K.S. ராஜா, தயாரிப்பு மேலாளர்- KNR சாமி, PRO சதீஷ்.

மேலும் செய்திகள்

Action thriller kuruku vazhi movie First look released

People looking for online information on Dhruva, Kurukuvazhi, SakshiAgarwal, Snehan will find this news story useful.