"நமக்கு கெடைக்காதுனு தெரிஞ்சும் அது பின்னாடி போவ கூடாது!"- அபிஷேக்கிற்கு பாவனி அறிவுரை!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் 5வது சீசனில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர் பாவனி ரெட்டி. கணவரை இழந்த இவருக்கு ரசிகர்களும், மற்ற ஹவுஸ் மேட்ஸூம் தொடர்ச்சியாக ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அபிஷேக், எமோஷனலாக பாவனி ரெட்டிக்கு ஆசீர்வாதம் செய்து, அவர் தன் வாழ்க்கையில் நல்லா இருக்க வேண்டும் என்று கூறியிருக்கும் நிகழ்வு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அபிஷேக் சோபாவில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென எமோஷனலாக பாவனியின் தலையில் கை வைத்து, “நல்லா இரு” என்று சொல்கிறார்.
“என்ன ஆச்சு.. திடீர்னு உனக்கு?” என்று பாவனி கேட்டதும், “திடீர்னு தோனுச்சி” என்று அபிஷேக் சொல்கிறார். அப்போது பாவனி, “சில விஷயங்கள் நமக்கு கிடைக்காத போது.. அதன் பின்னால் பின்னால் நாம் செல்லக் கூடாது என்பது தான் நான் வாழ்க்கையில் உணர்ந்த விஷயம்” என்று கூறுகிறார்.
அபிஷேக், “அப்படி இல்லை ..அந்த விஷயத்தின் மதிப்பு முக்கியம்.. அது வெறும் நகரும் மேகமாக அல்லாமல் இடிமின்னலாக இருக்கும் போது என்ன செய்வது?” என்று கூறுகிறார்.
மேலும் பேசிய அபிஷேக், “நம்முடைய வேலையை தொடர்ந்து செய்வதுதான், நமக்கு இவ்வளவுக்கும் நடுவில் இருக்கும் மிகப்பெரிய ஆறுதல்” என்கிறார். “சரியாகச் சொன்னாய்” என்று அபிஷேக் பேச்சுக்கு பாவனியும் ஆமோதித்தபடி பேசுகிறார். இவர்களின் உரையாடல்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.
கணவரை இழந்து 4,5 வருடங்களாக வாழும் பாவனி ரெட்டி தன் கணவர் உயிருடன் இல்லை; தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார் என்று பிக்பாஸ் வீட்டுக்குள் பலமுறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.