www.garudabazaar.com

பூஜையுடன் தொடங்கிய 'சூர்யாவின் 40வது படம்'.. இணையும் நட்சத்திரப் பட்டாளம்! முழு விவரம் உள்ளே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாண்டிராஜ் சூர்யா இணையும் சூர்யாவின் 40வது திரைப்படத்துக்கான படப்பிடிப்பு பூஜையுடன் கோவையில் இன்று தொடங்குகிறது.

சூர்யாவின்40வது படம் Surya40 Pandiraj Priyanka Mohan

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புதான் தற்போது பூஜையுடன் கோயம்புத்தூரில் தொடங்கியது. 

சூர்யா நடிப்பில் உருவாகும் 40வது திரைப்படமான இந்த திரைப்படத்தில் டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார்.

மேலும் நடிகர் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் இப்படத்தில் இணைகின்றனர். இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன. இப்படத்தின் ஒளிப்பதிவு இயக்குநராக ரத்னவேலு இணைந்துள்ளார். இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

ALSO READ: தளபதி 'விஜய்' நடிக்கும் அடுத்த 2 படங்களின் இயக்குநர்கள் இவர்களா?.

சூர்யாவின்40வது படம் Surya40 Pandiraj Priyanka Mohan

People looking for online information on Malavikamohan, Pandiraj, Sunpictures, Surya40 will find this news story useful.