www.garudabazaar.com

#Suriya39: வேற லெவல் "ஜெய் பீம்" டைட்டில் லுக்... பா.ரஞ்சித்துக்கு நன்றி சொல்லி தயாரிப்பாளர் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் ஜூலை 23-ஐ முன்னிட்டு அவரது சூர்யா40 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 22 மாலை வெளியானது.

2D rajasekar thanked pa ranjith for suriya39 jaibhim title

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்துக்கு ‘எதற்கும் துணிந்தவன்’ எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா39 படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது.

அதன்படி படத்துக்கு ஜெய் பீம்  என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கர்ணன் பட நாயகி ரஜிஷா விஜயன் நடிக்கும் இந்த படத்தில் சூர்யா ஒரு வழக்கறிஞராக நடிக்கிறார். இப்படத்தை 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.

இதனிடையே 2 டி என்டர்டெயின்மென்ட்டின் இணை தயாரிப்பாளர் - ராஜசேகர் பாண்டியன், ‘ஜெய் பீம்’ என்கிற இந்த டைட்டிலுக்காக, தனது ட்வீட்டில் இயக்குனர் பா ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சமதர்மத்துக்கான அம்பேத்கரின் தத்துவத்தை பேச்சிலும் படத்திலும் வலியுறுத்தும் பா.ரஞ்சித் தற்போது ஆர்யா நடிப்பில் இயக்கியுள்ள சர்பட்டா பரம்பரை படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

ALSO READ: நவரசா-வில் சித்தார்த் நடிக்கும் "இன்மை".. இந்த டைட்டிலுக்கு என்ன தான் அர்த்தம்? அவரே சொன்ன விளக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

2D rajasekar thanked pa ranjith for suriya39 jaibhim title

People looking for online information on JaiBhim, Pa Ranjith, Sarpatta Parambarai, Suriya39, Suriya40 will find this news story useful.