தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திலும் தன் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய்சேதுபதி. ஒரே நேரத்தில் பல்வேறு படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு வேடத்துக்கும் வித்தியாசம் காட்ட அவர் தவறுவதேயில்லை. அதனால் தான் அவர் மக்கள் செல்வன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்டுகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதில் அவரது நடிப்பும் , டிரெய்லரில் அவரது பின்னணிக் குரலும் பிரம்மிக்கத்தக்க வகையில் இருந்தது.
தற்போது சீனுராமசாமி இயக்கத்தில் 'மாமனிதன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கும் ஒரு படத்திலும், அருண்குமார் இயக்கும் 'சிந்துபாத்' படத்திலும் நடித்து வருகிறார்.
இது தவிர சமூக அக்கறை கொண்ட மனிதராகவும் பல்வேறு விஷயங்களுக்கும் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்த விஜய் சேதுபதி இரண்டு புலிகளை தத்தெடுத்துள்ளார். மேலும் அதன் பராமரிப்பிற்காக ரூ. 5 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கியுள்ளார்.
இதற்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூரில் உள்ள புலி ஒன்றை தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.