வித்தியாசமான பாணியில் கதை சொல்லும் விதத்தால் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் இயக்குநர் செல்வராகவன். இவரது காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்கள் இன்றும் ரசிகர்களால் சிலாகிக்கப்படுகிறது. குறிப்பாக புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களில் காட்சிக்கு காட்சி ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்திருப்பார்.

தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்து வெளியாகவிருக்கும் படம் என்ஜிகே. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மேலும் இன்று இயக்குநர் செல்வராகவனின் பிறந்தநாள் என்பதால் இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் படத்தின் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
We wish a wonderful year ahead for our “one of it’s kind” director @selvaraghavan. #HappyBirthdaySelvaraghavan #NGK pic.twitter.com/0MHtIzvHF9
— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 5, 2019