சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்த மாதம் வெளியான படம் 'வந்தா ராஜாவாதான் வருவேன்'. இதனைத் தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் சிம்பு, ஹன்ஸிகாவின் 'மஹா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடவிருக்கிறாராம். இதற்காக அவர் 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். இதுகுறித்து முறையான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.
இந்த படத்தை புதுமுக இயக்குநர் ஜமீல் இயக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். ஜமீல் ரோமியோ ஜூலியட் , போகன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.