மீசைய முறுக்கு படத்துக்கு பிறகு ஹிப்ஹாப் ஆதி நடித்து வரும் படம் நட்பே துணை. இந்த படத்தை அவ்னி மூவிஸ் சார்பாக சுந்தர்.சி தயாரிக்கிறார். மேலும் பார்த்திபன் தேசிங்கு என்ற புதுமுக இயக்குநர் இந்த படத்தை இயக்குகிறார். ஹிப்ஹாப் தமிழா இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ஷா ரா, ஆர்ஜே விக்னேஷ் உள்ளிட்ட யூடியூப் பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திலிருந்து கேரளா சாங், சிங்கிள் பசங்க, ஆத்தாடி போன்ற படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
மேலும் இந்த படத்தில் பாண்டியராஜன், இயக்குநர் கரு.பழனியப்பன், கௌசல்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் டிரெயல்ர் வெளியாகியுள்ளது. டிரெய்லரை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது இந்த திரைப்படம் ஹாக்கி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது தெரிய வருகிறது.
ஹிப்ஹாப் தமிழாவின் 'நட்பே துணை' டிரெய்லர் இதோ ! வீடியோ