சம்பவத்துக்கு நாள் குறித்த ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ திரைப்படம் தமிழ் புத்தாண்டையொட்டி வரும் ஏப்.12ம் தேதி ரிலீசாகவுள்ளது.

C.V.Kumar directing Gangs of Madras releasing on April 12

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘எனக்குள் ஒருவன்’, ‘முண்டாடுப்பட்டி’ போன்ற திரைப்படங்களை தயாரித்த சி.வி.குமார், ‘மாயவன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சி.வி.குமார் தற்போது ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ஹீரோயினை மையமாக கொண்டு உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரைப்படத்தில் பிரியங்கா ருத் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், ஆடுகள் நரேன், கலையரசன், வேலு பிரபாகரன், அசோக் குமார், இயக்குநர் ராமதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற இப்படம் தமிழ் புத்தாண்டையொட்டி வரும் ஏப்.12ம் தேதி ரிலீசாகவுள்ளது. சி.வி.குமாரின் திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்ய, ஹரி டவுசியா இசையமைத்துள்ளார்.