காதலர் கைது சர்ச்சையில் தொடர்பு? பிக் பாஸ் ஜூலி விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலம் பிரபலமான ஜூலி, தனது ஆண் நண்பர் காவலரை தாக்கியதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Bigg Boss Julie clarifies her rumoured boyfriend Rajhithibran's arrest controversy in a Video post

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஜூலி, சில திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அரியலூர் மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் ‘அனிதா எம்.பி.பி.எஸ்’ திரைப்படத்தில் அனிதாவாக நடித்து வருகிறார். இது தவிர ‘அம்மன் தாயி’ படம் உட்பட மேலும் சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங் பகுதியில், மஃப்ட்டியில் இருந்த காவலருடன் ஜூலியின் ஆண் நண்பர் ரஜிதிப்ரான் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாகவும், காவலர் அளித்த புகாரின் பெயரில் அவரை கைது செய்ததாகவும் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து நடிகை ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தன்னை பற்றியும், தனது நண்பர் குறித்தும் பரவிய தகவலில் சிறிதும் உண்மையில்லை. ஆதரமற்ற செய்திகளை பரப்பி வருகிறார்கள். இந்த சம்பவத்தின் போது அந்த இடத்தில் நான் இல்லவே இல்லை, ஆனால் நான் இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை குறிப்பிட்ட ஊடகத்திடம் தகவல் தெரிவித்த பின், அவர்களும் அதனை நீக்கிவிட்டனர். இருந்தபோதிலும், தன்னை பற்றி ஆபாசமாகவும், அவதூறாகவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கமெண்ட்களால் தான் மன உளைச்சலுக்கு ஆளாவதாக ஜூலி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2 சீசன் முடிந்துவிட்டது, இப்போதும் தன்னை குறிவைத்து மட்டம்தட்டுவதில் என்ன கிடைக்கப்போகிறது. பொய் தானே சொன்னேன். யாருமே உலகத்தில் பொய் கூறுவதில்லையா? பொய்யே சொல்லாத ஒருவர் என்னை பற்றி கமெண்ட் செய்யட்டும் எனவும் ஜூலி தெரிவித்துள்ளார்.