புதிய ஸ்மார்ட் தண்ணீர் பாட்டில்.. ‘நீங்க எவ்ளோ தண்ணி குடிக்கணும்னு இது சொல்லும்!’

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Arunachalam | Mar 19, 2019 01:17 PM

செல்போனை உபயோகிக்காதவர் இந்த உலகில் எவரும் இல்லை.

new smart water bottle launched to monitor our body water level

அந்த செல்போன் மூலம் நம் உடலையும் காத்துக் கொள்ள புதிய செயலியை லண்டனில் கண்டு பிடித்துள்ளனர்.

நம் உடலில் உள்ள ரத்த அழுத்தம்,இதயத் துடிப்பு போன்றவற்றை கண்டு பிடிப்பதை போல் நம் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்பதையும் அறிய செல்போன் செயலியுடன் கூடிய ஸ்மார்ட் தண்ணீர் பாட்டிலை உருவாக்கியுள்ளனர். லண்டனில் நடந்த வித்தியாசமான தொழில்நுட்ப பொருட்களின் கண்காட்சியில் இந்த ஸ்மார்ட் தண்ணீர் பாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது.

நாம் வேலை செய்யும் போது பல நேரங்களில் தண்ணீர் குடிக்க மறந்து விடுகிறோம். எனவே நாம் எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என இந்த ஸ்மார்ட் தண்ணீர் பாட்டில் நமக்கு நினைவூட்டும். இந்த ஸ்மார்ட் தண்ணீர் பாட்டில் விரைவில் சந்தைக்கும் வர உள்ளது.

Tags : #SMART WATER BOTTLE #TECHNOLOGY INNOVATION