‘தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு’.. அட்டாக் பாண்டி உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 21, 2019 05:12 PM

தினகரன் நாளிதழ் எரிக்கப்பட்ட வழக்கில் கைதான அட்டாக் பாண்டி உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

HC sentences \'attack\' Pandi, eight others to life imprisonment

கடந்த 2007 -ஆம் ஆண்டு, திமுக கட்சித் தொடர்பான கருத்துக் கணிப்பில் மு.க. அழகிரி குறித்து கருத்து தெரிவித்தாக அவரது ஆதரவாளர்கள், மதுரையில் உள்ள தினகரன் நாளிதல் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதில் தினகரன் நாளிதழ் ஊளியர்களான கோபி, முத்துராமலிங்கம், வினோத் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அட்டாக் பாண்டி என்பவர் உட்பட 17 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த வாரம் முக்கிய குற்றவாளிகள் மற்றும் சாட்சிகள் ஆகியோரின் வாக்குமூலங்களை கேட்டபின் இன்று தீர்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று(21.03.2019) இவ்வழக்கில் தொடர்புடைய அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழக்கி உயர்நிதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாயை தமிழக அரசு இழப்பீடாக வழக்க வேண்டும் எனவும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Tags : #ATTACKPANDI #DINAKARAN #MADRASHIGHCOURTMADURAIBENCH