'ஆள விடுங்கடா சாமி'...நான் இனிமேல்...கிரிக்கெட் மட்டும் விளையாடிக்குறேன்!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 01, 2019 09:07 AM
டிவி நிகழ்ச்சியில் பெண்களை பற்றிய தவறான கருத்துக்களை தெரிவித்ததற்காக கே.எல்.ராகுல் அணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்பு அணியில் சேர்க்கப்பட்டார்.இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 'இனிமேல் என்னுடைய முழு கவனமும் கிரிக்கெட் மீது மட்டும் தான் இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியினை தழுவியது.இருப்பினும் கே.எல்.ராகுல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.முதல் போட்டியில் 50 ரன்களையும், இரண்டாவது போட்டியில் 47 ரன்களையும் சேர்ந்து அசத்தினார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ''நான் சர்ச்சையில் சிக்கிய நேரம் மிகவும் கடினமான ஒன்றாகும்.அதிலிருந்து கடந்து வருவது என்பது அவ்வளவு எளிதான காரியமாக அமைந்து விடவில்லை.ஆனால் அந்த சர்ச்சைகள் எதுவும் எனது போட்டியினை பாதிக்காதவாறு பார்த்து கொண்டேன்.
அதில் நான் துவண்டு போயிருந்தால் நிச்சயம் என்னால் நன்றாக ஆடியிருக்க முடியாது.எனவே அந்த நேரத்தில் எங்கு இருந்த மன உறுதி தான் என்னை அந்த சர்ச்சைகளிலிருந்து மீண்டு வர உதவியாக இருந்தது'' என தெரிவித்திருக்கிறார்.
