மூன்று பிரிவுகளிலும் டாப்...'ட்ரோன் ஒலிம்பிக்ஸில்'...அடிச்சு தூக்கிய 'தல'யின் தக்ஷா குழு'!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Feb 23, 2019 02:39 PM
ஏரோ இந்தியா கண்காட்சியின் ஓர் அங்கமான நடைபெற்ற ட்ரோன் ஒலிம்பிக்ஸ் போட்டியில், நடிகர் அஜித்தின் 'தக்ஷா' குழு மூன்று பிரிவுகளில் பெற்றி பெற்று அசத்தியுள்ளது.

தல அஜித் திரையுலகையும் தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ் என பல்வேறு துறைகளில் தனது முத்திரையை பதித்தவர்.இந்திய திரைத்துறையிலேயே பைலட் உரிமம் வைத்திருக்கும் நடிகர் அஜித் மட்டுமே. ட்ரோன் தொழில்நுட்பங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித்,சென்னை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்ஷா குழுவிற்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.அவரின் வழிகாட்டுதலின் பேரில் தக்ஷா குழுவினர் உருவாக்கிய ஆளில்லா விமானம்(ட்ரோன்),வெற்றிகரமாக நீண்ட நேரம் பறந்து சாதனை படைத்தது.
இந்நிலையில் எச்.ஏ.எல் நிறுவனத்தின் சார்பில்,இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கண்காட்சியான 'ஏரோ இந்தியா - 2019' பெங்களூருவில் உள்ள எலஹங்கா என்ற விமானப் படை தளத்தில் நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சியில் 22 நாடுகளின் 61 அதிவேக போர் விமானங்களும், 165 கண்காட்சி மையங்கள் உட்பட 365 நிறுவனங்களின் மையங்களும் இடம் பெற்றன.
இதனிடையே இந்த ஆண்டு முதல் 'ட்ரோன் ஒலிம்பிக்ஸ்' என்ற பெயரில் முதல் முறையாக போட்டிகள் நடத்தப்பட்டன.இந்த போட்டியில் அஜித்தின் தக்ஷா அணியும் கலந்துகொண்டது.ஐந்து பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த போட்டியில்,4 கிலோவுக்கும் அதிகமான கண்காணிப்பு விமானப் பிரிவில் தக்ஷா அணி இரண்டாம் இடத்தைப் பிடித்து, ரூ.1.5 லட்சம் பரிசுத் தொகையைக் கைப்பற்றியது.
மேலும் 4 முதல் 20 கிலோவுக்கு இடையிலான கண்காணிப்பு விமானப் பிரிவில், தக்ஷா முதலிடத்தைப் பிடித்து 3 லட்ச ரூபாயைத் தட்டிச் சென்றது. பறக்கும் தொழில்நுட்ப சவால் பிரிவில், தக்ஷா இரண்டாம் இடத்தைத் தக்க வைத்தது. இதில் தக்ஷாவுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.இதில் சிறப்பு என்னவென்றால் ட்ரோன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கு பெற்ற எந்த அணியும் தக்ஷாவைப் போல மூன்று பிரிவுகளில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
