'உலகக்கோப்பை வரப்போகுது'...கொஞ்சம் அடக்கி வாசியுங்க...இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Feb 25, 2019 10:36 AM
ஐ.பி.எல் போட்டிகளில் தேவையில்லாத ரிஸ்க் எடுத்து விளையாடினால் அது உலகக்கோப்பை போட்டிகளுக்கு பாதகமாக அமைந்து விடும்,எனவே வீரர்கள் கவனமாக விளையாட வேண்டும் என இந்திய கேப்டன் விராட் கோலி வீரார்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
உலகக்கோப்பை தொடருக்கு முன் ஒருநாள் போட்டிகள் குறைவாக விளையாடுவது குறித்து வருத்தப்பட்டுள்ள அவர்,வீரர்கள் தங்களின் உடல் தகுதியில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.உலகக் கோப்பை போட்டிகள் வரும் மே மாதம் தொடங்க இருக்கிறது.அதற்கு முன்பு ஐ.பி.எல் போட்டிகள் நடக்க இருக்கின்றது.எனவே தற்போது இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவுடன் நடக்கும் ஒரு நாள் போட்டிகள் தான்,உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு நடைபெறும்,கடைசி ஒருநாள் போட்டியாக அமைய இருக்கிறது.
இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள கோலி 'உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்பு அதிகமான ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் வகையில் அட்டவணை தயாரித்திருக்க வேண்டும்.தற்போது அப்படி அமையாதது வருத்தமாக இருக்கிறது.எனவே வருங்காலத்தில் உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வகையில் அட்டவணை தயாரிக்க வேண்டும் என கோலி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட இருக்கும் வீரர்கள்,தங்களது அணுகுமுறையை, ஒரு நாள் போட்டிக்கு ஏற்றவகையில், தொடர்ந்து பார்த்துக்கொள்ள வேண்டும்.வீரர்கள் பார்மை இழந்து விட்டால், மீண்டும் பார்முக்கு திரும்புவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.எனவே வீரர்கள் இவை அனைத்தையும் மனதில் வைத்து ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டும் என கோலி,வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.