‘குரு தோனியை கூலாக இருக்க விடமாட்டேன்’ என்று சொன்ன வீரருக்கு பேட்ட ஸ்டைலில் CSK பதில்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Feb 24, 2019 06:17 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருப்பதால் இந்த ஐபிஎல் சீசன் பெருவாரியான ரசிகர்களையும் உற்சாகமடைய வைத்துள்ளது.

உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் முதல் உலக வீரர்கள் வரை மிக்ஸிங்காக இடம் பெறுவதாலேயே எப்போது ஐபிஎல் சீசன்கள் மற்ற போட்டிகளை விடவும் வித்தியாசமாக காணப்படும். இந்திய அணி வீரர்களே தனித்தனியாக போட்டியிடுவதால் ரசிகர்களும் இந்த போட்டிகளில் அணி மாறும் கூத்தெல்லாம் அரங்கேறும்.
அவ்வகையில் தற்போதைய ஐபிஎல் டி20 போட்டிகளில் டெல்லி அணியில் விளையாடவுள்ள ரிஷப் பண்ட், தோனியை வம்பிழுத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதில், தோனியின் அருமை பெருமைகள் அடங்கிய புத்தகத்தை வைத்துக்கொண்டு பேசுகிறார் ரிஷப் பண்ட்.
அதில் பேசும் ரிஷப், ‘மகி பாய்தான் எனக்கு குரு. அவர் இல்லை என்றால் இத்தகைய விக்கெட் கீப்பராக நான் உருவாகி நிற்க முடியாது. ஆனால் இந்த ஐபிஎல் போட்டியில் நான் விளையாடும் டெல்லி அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸில் தோனி விளையாடுகிறார். நான் அவரை கூலாக இருக்கவே விடமாட்டேன்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை டெல்லி அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியின் பேட்ட பட ஸ்டைலில் புகைப்படம் போட்டு ரியாக்ட் செய்திருக்கிறது. இந்த ஆரோக்கியமான ட்வீட்களால் ரசிகர்கள் மேலும் உற்சாகத்தில் உள்ளனர்.
#Thala Dhoni to Rishabh Pant be like... pic.twitter.com/oMQntHtiTh
— Chennai Super Kings (@ChennaiIPL) February 23, 2019
