‘கடைசி ஓவரை விட இதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது’.. சாஹலுக்கு பதிலளித்த விஜய் சங்கர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 07, 2019 05:51 PM

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2 -வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

Pressure is more in speaking in Hindi, Vijay Shankar tells Chahal TV

இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக பெங்களூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதனை அடுத்து நாக்பூரில் நடந்த 2 -வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றியடைந்தது. இப்போட்டியில் வென்றதன் மூலம்  சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 500  ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற கிரிக்கெட் அணி என்கிற சாதனையை இந்தியா படைத்தது.

இப்போட்டியில் விளையாடிய தமிழக வீரரான விஜய் சங்கர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழி சேர்த்தார். இதில் பேட்டிங் செய்து 46 ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டிக்கு பின் சாஹல் டிவிக்கு விஜய் சங்கர் அளித்த பேட்டியில், ‘உங்களுக்கு கடைசி ஓவர் வீசுவது கஷ்டமா? இல்லை ஹிந்தி பேசுவது கஷ்டமா?’ என்ற கேள்வியை இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கேட்க, அதற்கு ஹிந்தியில் பேசுவதுதான் கஷ்டம் என விஜய் சங்கர் சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளார்.

Tags : #TEAMINDIA #VIRATKOHLI #VIJAYSHANKAR ##CHAHAL #INDVAUS