'உங்கள நம்புனதுக்கு நல்லா வெச்சு செஞ்சிட்டீங்க'...பேசாம ரெஸ்ட் எடுங்க...கடுப்பில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Feb 25, 2019 01:49 PM

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் தோனியின் ஆட்டம் ரசிகர்களை கடுமையாக வெறுப்பேற்றியுள்ளது.

 

MS Dhoni criticised on Twitter after slow knock in 1st T20I

நேற்று தொடங்கிய முதல் டி20 போட்டியானது விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே சேர்த்து.கே.எல்.ராகுல், விராட் கோலி ஜோடியை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் நடையை கட்டினார்கள்.இதனால் 15 ஓவர்களுக்குள் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.ஆனால் கடைசி 5 ஓவரில் வெறும் 26 ரன்கள் மட்டுமே இந்திய அணி சேர்த்தது.இது ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் தோனி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எண்ணிய ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியது.தோனியின் நிதானமான ஆட்டம் ரசிகர்களின் பொறுமையை வெகுவாக சோதித்தது. 37 பந்துகளை சந்தித்த தோனி 27 ரன்கள் மட்டுமே அடித்தது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.சமூகவலைதளைங்களில் ரசிகர்கள் பலரும் தங்களின் ஆதங்கத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து வலுபெற்று வரும் நிலையில் அவரின் நேற்றைய ஆட்டம் ,குறைந்தபட்சம் டி20 போட்டிகளில் இருந்தாவது தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற விவாதத்தை எழுப்பியுள்ளது.தோனி அணியில் இருப்பது நல்லது தான்,ஆனால் வீரர்களுக்கு ஆலோசனை கூறுவதோடு அவரின் பணி இருக்கட்டும் என ரசிகர்கள் சிலர் பதிவிட்டுள்ளார்கள்.

அவரை வைத்து ட்ரோல் செய்து வரும் சிலர் அவர் இந்திய அணிக்காக விளையாடுவதை விட ஐபிஎல் போட்டிகளில் தான் ஆக்ரோஷமாக விளையாடுகிறார் என கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்கள்.இதனிடையே தோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் ரசிகர்கள்,'டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறாரே,அவரை மட்டும் ஏன் யாரும் குறை சொல்லவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

உலகக் கோப்பை போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் தோனியின் ஆட்டம் மீண்டும் விமர்சனத்திற்கு ஆளாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MSDHONI #CRICKET #DINESHKARTHIK #IPL #WORLD CUP 2019 #IPL2019