‘கோலி இந்த வரிசையில் இறங்குவது முட்டாள்தனமான முடிவு’.. ரவி சாஸ்திரியை கடுமையாக சாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 04, 2019 05:26 PM
உலகக் கோப்பையில் விராட் கோலி இறங்கும் இடம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய யோசனை முட்டாள்தனமானது என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான அஜீத் அகார்கர் விமர்சித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அனைத்து விதமான போட்டிகளிலும் சிறந்த வீரராக வலம் வருகிறார். விராட் கோலி டெஸ்ட் போட்டியில் 4 -வது வீரராகவும், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 3 -வது வீரராகவும் களமிறங்கி விளையாடி வருகிறார்.
அண்மையில் பேட்டியளித்த இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ‘உலகக் கோப்பையில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை மாற்றி அமைக்க அணி நிர்வாகம் விரும்புகிறது. உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பலமாக இருக்க வேண்டுமானால், விராட் கோலி 4 -வது வரிசையில் களமிறங்க வேண்டும்’ என ரவி சாஸ்திரி யோசனை தெரிவித்தார்.
இந்நிலையில், உலகக் கோப்பையில் விராட் கோலி 4 -வது வீரராக களமிறங்குவது குறித்து கூறிய ரவி சாஸ்தியின் யோசனை முட்டாள்தனமானது என இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜீத் அகார்கர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர்,‘கோலியைப் பொறுத்தவரை 3 -வது வீரராக களமிறங்கிதான் 32 சதங்களை எடுத்துள்ளார். கோலி செய்துள்ள சாதனைகள் எல்லாம் இந்த பேட்டிங் ஆர்டரில்தான். என்னைப்பொறுத்தவரை கோலி 4- வது வீரராக இறங்குவது முட்டாள்தனமான முடிவு’ என அஜீத் அகார்கர் கூறியுள்ளார்.