'ஃபர்ஸ்ட்டு நான் எதுக்கு அத பண்ணனும்?!!'... 'சீண்டிய முன்னாள் வீரருக்கு'... 'ஹிட்மேன் கொடுத்த பதிலடி!!!'... 'ஆமா இவரு யார சொல்றாரு???'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரோஹித் சர்மா தன்னை தேவை இல்லாமல் வம்பிழுத்த முன்னாள் வீரருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் வழக்கம்போலவே விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி சொதப்பி வெற்றி வாய்ப்பை இழந்தது. சீஸனின் தொடக்கத்தில் நன்றாக விளையாடிய அந்த அணி கடைசி 5 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்து பிளே-ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. அதேநேரம் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடி வெற்றிகளை குவித்து மறுபடியும் கோப்பையும் வென்றது.
இதையடுத்து விராட் கோலி பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும், இந்திய அணிக்கும் ரோஹித் சர்மாவையே கேப்டனாக நியமிக்க வேண்டும் எனவும் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்தார். அதேநேரம் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பெங்களூர் அணி தான் சரியில்லை, அதற்கு விராட் கோலி என்ன செய்வார் எனவும், அதே பெங்களூர் அணியை வைத்துக் கொண்டு ரோஹித் சர்மாவால் கோப்பை வெல்ல முடியுமா எனவும் கேட்டு ரோஹித் சர்மாவை சீண்டினார்.
இந்நிலையில் தற்போது ஆகாஷ் சோப்ராவின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள ரோஹித் சர்மா, "முதலில் நான் ஏன் வேறு அணியை கோப்பை வெல்ல வைக்க வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வழியில் செல்ல நினைக்கிறது. ஒரு வீரராகவும், கேப்டனாகவும் அதே வழியில் தான் நானும் செல்ல நினைக்கிறேன். இந்த அணி ஒரு இரவில் உருவானது இல்லை. இந்த அணிக்கு வீரர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருப்பதில் நம்பிக்கை இல்லை. மேலும் ஒவ்வொரு வீரரும் ஏலத்தில் இருந்து தான் எடுக்கப்பட்டார்கள். ரோஹித் சர்மா உட்பட" எனக் கூறியுள்ளார்.
ஆகாஷ் சோப்ராவுக்கு பதிலளித்துள்ள ரோஹித் சர்மா அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி என்ன தவறு செய்கிறது என்பதை பற்றியும் தான் மறைமுகமாக சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் விராட் கோலி தான் எப்போதுமே வீரர்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார். அத்துடன் இதுவரை ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை குவித்துள்ள மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகள் அதுபோல வீரர்களை அடிக்கடி மாற்றுவதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.