அதிரடியான 4 முக்கிய மாற்றங்களுடன் களமிறங்கிய இந்திய அணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 10, 2019 02:57 PM

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4 -வது ஒருநாள் போட்டியில் இந்தியா அணியில் 4 புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

IND vs AUS : India make four changes in Mohali

இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்று டி20 தொடரைக் கைப்பற்றியது. இதற்குபின் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மற்றும் 2 -வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதனையடுத்து ராஞ்சியில் நடைபெற்ற 3 -வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவுயது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்ற இந்திய அணியில் 4 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில், விக்கெட் கீப்பர் தோனிக்குப் பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். அம்பதி ராயுடுக்கு பதில் கே.எல்.ராகுலும், ஜடேஜாவுக்கு பதில் சாஹலும், முகமது ஷமிக்கு பதில் புவனேஸ்வர் குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து இன்று(10.03.2019) இரு அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

Tags : #INDVSAUS #TEAMINDIA #RISHABHPANT #CHAHAL #BHUVNESHWARKUMAR #KLRAHUL