‘ஹம்மர்’ காரில் வந்த ‘தல’தோனி.. சூழ்ந்த ரசிகர்கள்.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 07, 2019 02:58 PM
தோனி தனது சொகுசு காரில் இந்திய வீரர்களான கேதர் ஜாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை ஏற்றிக் கொண்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 2 டி20 போட்டிகளிலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. இதனால் ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை 2-0 என்கிற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றது.
இதனை அடுத்து நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 -வது ஒருநாள் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வென்றதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 500 ஒருநாள் போட்டிகளில் வென்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிரடியாக ஆடி 116 ரன்கள் அடித்தார். இது சர்வதேச ஒருநாள் போட்டியில் கோலி அடிக்கும் 40 சதம். மேலும் தமிழக வீரரான விஜய் சங்கர் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்போட்டியில் பரபரப்பான கடைசி ஓவரை வீசிய விஜய் சங்கர் ஆஸ்திரேலியாவின் 2 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3 -வது ஒருநாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மைதானத்தில் நாளை(08.03.2019) நடைபெற உள்ளது. இதற்காக விமானம் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராஞ்சி விமான நிலையம் வந்தனர். அப்போது விமான நிலையத்தில் இருந்து தோனி தனது ஹம்மர் சொகுசு காரில் கேதர் ஜாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை அழைத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
