உலகக் கோப்பையை காணச் செல்லும் அனுஷ்கா: வெளியில் சொன்ன திருமண ரகசியங்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Mar 05, 2019 05:13 PM

இவ்வருடம் இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியுடன் அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Anushka pays for her seat to travel in the team bus of cricketers wife

பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக இருக்கும் அனுஷ்கா ஷர்மா, பெரும் ஹீரோயினாக இருக்கும்பொழுதிலும் தனது குடும்ப வாழ்க்கை மற்றும் திரைத் தொழில் இரண்டையும் திறம்படச் செய்யும் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவராக விளங்குகிறார். இவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் கடந்த 2017-ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது.

அந்த திருமணத்தைப் பற்றி தற்சமயம் மிகவும் எக்ஸ்குளூசிவ் ரகசியங்களை பகிர்ந்துள்ள அனுஷ்கா, மிகவும் நெருக்கமான உறவுகள் மற்றும் நண்பர்கள் என சுமார் 42 பேரின் முன்னிலையில் மட்டுமே, இத்தாலியில் ரகிசியமாக திருமணம் செய்ய எண்ணியதாகவும், அப்போது அங்கிருந்த உணவளிப்பவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, விராட் கோலியின் பெயர் என்ன என்று அவர் கேட்டதற்கு அனுஷ்கா அப்போது கோலியின் உண்மையான பெயரை மறைத்து ராகுல் என்று சொன்னதாக நியாபகம் என்று கூறி அதிரவைத்துள்ளார்.

தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் அவரது இந்த பேச்சு ஓய்வதற்குள் வந்துள்ள அடுத்த அறிவிப்பின்படி,  அடுத்து நடக்கவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிரிக்கெட் வீரர்களின் தரப்பில் இருந்து குடும்ப உறுப்பினர்கள் செல்வதற்கான சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கும் அனுஷ்கா ஷர்மா தனிப்பட்ட முறையில் பணம் கட்டி செல்லவிருப்பதாகவும், அதே சமயம், ஸ்டேடியம் வரை அனுஷ்காவுக்கு கார் வசதி ஏற்பாடு செய்யப்படுவதோடு, மைதானம் வரை அவர் கோலியுடன் செல்லாமல் தனியாக செல்வார் என்றும் தெரிகிறது.