நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிப்பு: தலைமை தேர்தல் ஆணையர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 10, 2019 06:36 PM

மக்களைத் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Election Commission to announce Lok Sabha poll schedule

இந்தியாவில் மக்களைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி குறித்த அறிவிப்புகளை அறிவித்த வண்ணம் உள்ளன. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தங்களது கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் அறிவிப்புகளை கிட்டதட்ட அறிவித்து உள்ளன.

கடந்த 2014 -ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 9  கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான கால ஆட்டவணையை இன்று(10.03.2019) 5 மணியளவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் 17-வது நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தற்போது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் அறிவித்தார். அதில், 17 -வது மக்களைவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தெரிவித்துள்ளார். முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 11-ல் தொடங்குகிறது.

1. ஏப்ரல் 11 - முதல் கட்டத் தேர்தல்

2. ஏப்ரல் 18 - 2ம் கட்டத் தேர்தல்

3. ஏப்ரல் 23 - 3ம் கட்டத் தேர்தல்

4. ஏப்ரல் 29 - 4ம் கட்டத் தேர்தல் 

5. மே 6 - 5ம் கட்டத் தேர்தல் 

6. மே 12 - 6ம் கட்டத் தேர்தல் 

7. மே 19 - 7ம் கட்டத் தேர்தல் 

தமிழகம் உள்பட 22 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2-வது கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத்  தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் மார்ச் 19 -ம் தேதி முதல் செய்யப்பட்டு மார்ச் 26 -ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் 21 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி மக்களவை தேர்தலுடன் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #ELECTIONCOMMISSION #LOKSABHAELECTIONS2019