டாடாவின் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக்: களமிறங்கும் ஆல்ட்ரோஸ் காரின் ஸ்பெஷல் என்ன தெரியுமா?
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்By Siva Sankar | Mar 01, 2019 09:09 PM
புதிய ஆல்ட்ரோஸ் 45X ரக காரினை டாடா பொசிஷன் செய்யவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
2019-ம் ஆண்டினை ஹேரியர் எஸ்யூவியுடன் ஆரவாரமாக தொடங்கியது டாடா நிறுவனம். இதனையடுத்து வரும் மார்ச் 7-ஆம் தேதி மற்றும் 17-ஆம் தேதி தேதிகளில் நடக்கவுள்ள ஜெனீவா சர்வதேச மோட்டார் ஷோவில் ஆட்டோமொபைல் எக்ஸ்போ கோலாகலமாக நடக்கவிருக்கிறது. இதில் அதிமுக்கியமான 4 புதிய ரக கார்களை டாடா மோட்டார்ஸ் களமிறக்கவுள்ளதாக தெரிகிறது. அவைதான் மைக்ரோ எஸ்யூவி கான்செப்ட்டில் உருவாக்கப்பட்டுள்ள Hornbill, Blackbird என்கிற மிட்சைஸ் எஸ்யூவி. 45X எனும் பிரீமியம் ஹேட்ச்பேக் கொண்ட ஆல்ட்ரோஸ், பிரீமியம் எஸ்யூவியான H7X. இவற்றுள் பலரையும் கவர்ந்துள்ள டாடா ஆல்ட்ரோஸ் பற்றி பார்க்கலாம்.
கடந்த வருடம் டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமானது இந்த 45X கார். டாடாவின் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் என்பதாலேயே இந்த காருக்கு மவுசு கூடியது. பலரும் இந்த புதுவரவை எதிர்பார்க்கத் தொடங்கினர். கடல் பறவை ஆல்பட்ரோஸில் இருந்து ஆல்ட்ரோஸ் எனும் பெயர் உருவாகியது. செயல்திறன், அதிவேகம், வசதியான உள்ளிருப்பு ஆகியவற்றையெல்லாம்தான் ஆல்ட்ரோஸ் 45X ரக காரின் சிறப்பம்சங்களாக டாடா முன்வைத்திருக்கிறது. ஆல்ட்ரோஸ், Impact Design 2.0 கோட்பாடுகளின்படி உருவாக்கப்பட்டிருக்கும் ஆல்ட்ரோஸ் 45X-ஆனது பெலினோ, எலீட் i20, ஜாஸ் ஆகிய கார்களுக்குப் போட்டியாக சந்தைக்குள் நுழைகிறது.
வரும் ஆண்டில் சந்தைக்குள் களமிறங்கும் இந்த கார் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் தயாராகவிருப்பதோடு, இதன் உள்ளமைப்பு பிரீமியம் மெட்டீரியல்களுடன் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அசத்தலான ஷோல்டர் லைன், அகலமான ரியர் வியூ கண்ணாடிகள், மேல்நோக்கி இருக்குன் விண்டோ லைன், முட்டைக்கண் ஹெட்லைட்ஸ், கூர்மையான முன்பக்க பம்பர், மெல்லிய க்ரில் என டீசரே, ரிலீஸின் எதிர்பார்ப்பை கூட்டுகிறது. இதே காரின் 250 கி.மீ ரேஞ்ச் கொண்ட ஆல்ட்ரோஸின் EV வெர்ஷன் அடுத்த 2 வருடத்தில் வேறு வரவுள்ளதாம்.
அனலாக் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பின்பக்க கதவு கைபிடியில் C-பில்லர், பெரிய மிதவையான டச் ஸ்கிரீன் சிஸ்டம், அதற்குக் கீழ் ஏசி வெண்ட்ஸ் உள்ளன. காண்போர் மெச்சும் ஃபினிஷிங் இதன் கூடுதல் சிறப்பு. ஆனால் இந்த ஹேட்ச்பேக்கில் டீசல் என்ஜின் கிடைப்பது என்பது உறுதியாகத் தெரியவரவில்லை. காரணம் BS-VI மாசுக் கட்டுப்பாட்டு விதிகளின்படிம் டீசல் என்ஜினின் உற்பத்திச் செலவினங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இதேபோல் MT/AT கியர்பாக்ஸ் வசதிகள் இதில் இல்லை. ஆனால் நவீன பாதுகாப்பு அம்சங்கள் அத்தனையும் நிறைந்த இந்த ஆல்ட்ரோஸ் 45X பலருக்கும் ஃபேவரேட் ஆகுமா என சந்தைக்கு வந்தபிறகுதான் தெரியும்.