'பெண்ணின் பெட் ரூமுக்குள் இருந்த சாக்கடை மூடி'... 'திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி'... இது தெரியாம இவ்வளவு நாள் தைரியமா தூங்கியிருக்கேன்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Mar 24, 2021 01:49 PM

பெண்ணின் படுக்கையறைக்குள் இருந்த சாக்கடை மூடியைத் திறந்தபோது அந்த பெண்ணுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

Woman reveals the nuclear BOMB SHELTER she discovered under a manhole

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜெனிபர் லிட்டில். இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையிலிருந்த ஜெனிபருக்கு அதற்காகக் காலமும் கனிந்தது. இறுதியாகக் கடந்த 1951ம் ஆண்டு கட்டப்பட்ட வீடு ஒன்றை ஆசை ஆசையாக அவர் வாங்கியுள்ளார்.

Woman reveals the nuclear BOMB SHELTER she discovered under a manhole

ஆசையாக வாங்கிய வீட்டில் வசித்து வந்த அவர், தனது படுக்கையறையில் ஒரு சாக்கடை மூடி இருப்பதைப் பார்த்துள்ளார். அதை முதலில் கண்டுகொள்ளாத ஜெனிபர் இறுதியாக அதில் என்ன இருக்கிறது எனத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்துள்ளார். பின்னர் தனது நண்பர் ஒருவரை அழைத்த ஜெனிபர் அவரின் உதவியோடு அந்த மூடியைத் திறந்துள்ளார்.

Woman reveals the nuclear BOMB SHELTER she discovered under a manhole

அப்போது தான் அது சாக்கடை இல்லை, அது ஒரு பதுங்குகுழி என்பது அவருக்குத் தெரிய வந்துள்ளது. இது தெரியாமல் இவ்வளவு நாள் இங்கு தூங்கியிருக்கிறேனே என்பதை உணர்ந்து அதிர்ந்து போனார் ஜெனிபர். அந்த காலகட்டத்தில் கலிபோர்னியா பகுதியில் உள்ள மக்கள் அணுக்குண்டு தாக்குதல் நடந்தால் அதிலிருந்து தப்புவதற்காகத் தங்கள் வீடுகளில் இதுபோன்ற பதுங்குகுழிகளை ஏற்படுத்தியிருந்தனர்.

Woman reveals the nuclear BOMB SHELTER she discovered under a manhole

அதனுள்ளே இருவர் தங்குவதற்கு வசதியாக படுக்கையறையும், சிறுநீர் கழிக்க வசதியாகச் சிறிது இடமும், மற்றும் உடல் எடையைக் குறைக்க அந்த காலத்தில் பயன்படுத்தப்படும் ஒரு கருவியும் அதனுள் இருந்துள்ளது. சமூகவலைத்தளங்களில் ஜெனிபர் இந்த வீடியோவை வெளியிடப் பலரும் அதனைச் சரி செய்து நீங்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman reveals the nuclear BOMB SHELTER she discovered under a manhole | World News.