'இந்த பெண் ஆண்களை நிமிர்ந்தே பார்க்கமாட்டாங்க'... 'தப்பித் தவறி பார்த்தால் அடுத்த செகண்ட் நடக்கும் விபரீதம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Mar 24, 2021 10:22 AM

இங்கிலாந்து பெண் ஒருவருக்கு இருக்கும் பிரச்சனை பலருக்கும் ஆச்சரியமாக இருந்தாலும், அவர் அதனுடனே தான் தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.

Woman avoids making eye contact with men, she suffers from cataplexy

மனிதனின் உடல் தான் இருப்பதிலேயே மிகவும் சிக்கலான ஒரு இயந்திரம் எனக் கூறுவார்கள். அறிவியல் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் கூட, பல புதுசு புதுசாக நோய்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. சில நேரங்களில் இப்படி கூட ஒரு நோய் இருக்குமா எனத் தோன்ற வைக்கும் வண்ணம் சில நிகழ்வுகள் நடக்கும். அப்படி ஒரு நபர் தான் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Woman avoids making eye contact with men, she suffers from cataplexy

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கிறிஸ்டி பிரவுன். 32 வயதான இவருக்கு இருக்கும் பிரச்சனை என்பது சற்று வித்தியாசமானது. அவர் ஒரு வகையான அபூர்வ மூளை கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்படி எந்த உணர்ச்சியானாலும், அது கோபமோ, சிரிப்போ, பயமோ அல்லது கவர்ச்சியாக இருந்தால் கூட உடனே மயங்கி விழுந்து விடுவார்.

Woman avoids making eye contact with men, she suffers from cataplexy

குறிப்பாக கிறிஸ்டி வெளியே செல்லும் போது கவர்ச்சியான ஒரு ஆணை பார்க்கிறார் என்றால் அடுத்த நொடியே, அதே இடத்தில் அவர் மயங்கி விழும் விபரீதம் நடந்துள்ளது. இதன் காரணமாகவே கிறிஸ்டி வெளியே செல்வது இல்லையாம். மிகவும் அவசியம் என்ற காரணத்திற்காக வெளியே சென்றால், யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் தலையைக் குனிந்தவாறே தான் கிறிஸ்டி செல்வது வழக்கம்.

Woman avoids making eye contact with men, she suffers from cataplexy

இதுகுறித்து பேசிய கிறிஸ்டி, ''இந்த பிரச்சனை எனக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுக்கிறது. என்னால் மற்றவர்கள் போலச் சாதாரணமாக வெளியில் நடமாட முடியவில்லை. ஆனால் இந்த பிரச்சனையில் ஒரு நன்மையும் உள்ளது. யாராவது என்னிடம் சண்டை போட்டால், நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தவுடன் நான் மயங்கி விழுந்து விடுவேன். அந்த சண்டையும் நின்று விடும்'' என கிறிஸ்டி வேடிக்கையாகக் கூறியுள்ளார்.

Tags : #CATAPLEXY

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman avoids making eye contact with men, she suffers from cataplexy | World News.