எவ்வளவு விலைன்னு தெரியாம, சல்லிசல்லியா நொறுக்கிட்டாங்களே.. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷம்.. பெண் செஞ்ச வேலை..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் நடைபெற்ற கலைப் பொருள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷம் ஒன்றை பெண்மணி விளையாட்டாக டீல் செய்யப்போக அது உடைந்திருக்கிறது. அதன் பிறகு தான் அந்தப் பொருளின் விலையே தெரிய வந்திருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.
உலகம் முழுவதும் கலைப் பொருட்களை வாங்கவும், அதுபற்றி தெரிந்து கொள்ளவும் பலருக்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இவர்களுக்காக முக்கிய நகரங்களில் அவ்வப்போது பெரும் கலைஞர்களின் படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்படுகின்றன. அந்த வகையில் Jeff Koons எனும் கலைஞரின் படைப்புகள் உலக பிரசித்தமானவை. குறிப்பாக இவர் உருவாக்கிய ‘balloon dog’ சீரியஸ் கலை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இந்த ‘balloon dog’ காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
அமெரிக்காவின் மியாமி பகுதியில் உள்ள Art Wynwood-ல் இந்த கண்காட்சி நடைபெற்றிருக்கிறது. இதில், ஏராளமான கலை ரசிகர்கள் கலந்துகொண்டு படைப்புகளை பார்வையிட்டிருக்கின்றனர். அப்போது, balloon dog-ஐ தட்டிப் பார்க்க முயற்சித்த ஒருபெண் அதனை சுக்குநூறாக உடைத்திருக்கிறார். எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவம் மொத்த கண்காட்சியையே பரபரப்பாக்கியுள்ளது.
ரசிகர்களின் இந்த அதிர்ச்சிக்கு காரணம் balloon dog-ன் சந்தை விலை சுமார் 42,000 அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 35 லட்ச ரூபாய். இதுபற்றி சக கலைஞரான ஸ்டீபன் காம்சன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அந்தப் பெண் கலைப் படைப்பைத் தட்டி அது உண்மையான பலூனா என்று பார்க்க நினைத்திருக்கிறார். அந்த பெண் அங்கு இருப்பதை நான் பார்த்தேன். அவர் balloon dog-ஐ தட்டிக் கொண்டிருந்தார். அப்போது அது கீழே விழுந்து ஆயிரக்கணக்கான துண்டுகளாக உடைந்தது" எனத் தெரிவித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
Jeff Koons-ன் சிறந்த கலைப் படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் balloon dog-ற்கு நிதியுதவி செய்த Bel-Air Fine Art இன் கலை ஆலோசகரான Benedicte Caluch, அந்தப் பெண் வேண்டுமென்றே கலைப் பகுதியை உடைக்காததால், காப்பீடு மூலம் சேதத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் எனத் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
