"என் புருஷனுக்கு நான் குடுக்குற 'VALENTINES DAY' ஃகிப்ட் இது..." 'ஓப்பன்' பண்ணி பாக்குறப்போ அந்த மனுஷனுக்கு ஒரு 'நிமிஷம்' அள்ளு விட்டுருச்சு..." வைரல் 'வீடியோ'!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Feb 15, 2021 03:23 PM

உலகெங்கிலும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், தங்களது அன்புக்குரியவர்களுக்கு ஆச்சரிய பரிசுகளை வித விதமான வழிகளில் அளித்து, அன்பை மாறி மாறி பொழிந்து கொண்டனர்.

wife prints women picture liked by her husband in insta gifts him

இந்நிலையில், தனது கணவருக்கு காதலர் தின பரிசை அளிக்க திட்டம் போட்ட மனைவி, அதன் மூலம் ஒரு எச்சரிக்கையையும் தனது கணவருக்கு மறைமுகமாக அவர் கொடுத்துள்ளார். டிக் டாக்கில் பிரபலமான க்ளோரியா (Gloria) என்ற பெண் தான் அந்த மனைவி. இன்ஸ்டா மூலம் தனது கணவர் லைக் செய்த பெண்களின் புகைப்படங்களை எல்லாம் சேகரித்த க்ளோரியா, அதனை பிரிண்ட் செய்து தன் கைப்பட உருவாக்கி, கணவருக்கு பரிசளித்துள்ளார்.

இதுகுறித்து டிக் டாக்கில் வீடியோ பதிவிட்ட க்ளோரியா, 'எல்லோரும் காதலர் தினத்தன்று தங்களாலான பொருட்களை மற்றவர்களுக்கு பரிசளிப்பார்கள். எனவே, என் கணவருக்காக, இந்த அழகான சிறிய பெட்டிக்குள், இன்ஸ்டாக்ராமில் அவர் விரும்பிய அனைத்து பெண்களின் புகைப்படங்களையும் இணைத்து, அவருக்கு பரிசளித்துள்ளேன். அவர் அதை நிச்சயம் விரும்புவார் என நான் நினைக்கிறன்' என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த வீடியோ, சுமார் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வரும் நிலையில், பலரும் பல விதமான கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர். க்ளோரியாவின் ஐடியா பலருக்கும் பிடித்து போன நிலையில், 'இது மிகவும் பொருத்தமான பரிசாக இருக்கும்' என்றும், 'நிச்சயம் இந்த பரிசு உங்களது கணவருக்கு பிடிக்கும்' என்றும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதே வேளையில், இது மிகவும் அற்பமான பரிசு என்றும் இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்ற ரீதியிலான கருத்துக்களையும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Wife prints women picture liked by her husband in insta gifts him | World News.