அணிந்திருந்த 'ஆடையில்' எழுதியிருந்த வார்த்தை...! ஏங்க இந்த மாதிரி எழுதின 'ட்ரெஸ்' போட்டீங்க...? - 'மாடல்'னு நினைச்சா அங்க தான் செம டிவிஸ்ட்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் பிரபல மெட் காலா (Met Gala) ஃபேஷன் ஷோவில் அரசியல் கருத்து கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் அமெரிக்க பெண் எம்.பி அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ-கார்டஸ் (Alexandria Ocasio-Cortez).
அமெரிக்காவின் பிரபல ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியான மெட் காலா (Met Gala) கடந்த ஆண்டு கொரோனா காரணமாக நடைபெறாததையடுத்து இந்த ஆண்டு நியூயார்க் நகரத்தில் கடந்த திங்கட்கிழமை (13-09-2021) நடைபெற்றது.
இது வழக்கமாக நடைபெறும் ஃபேஷன் நிகழ்ச்சி போன்றது அல்ல. இந்த ஃபேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான டிக்கெட் விலை மட்டுமே சுமார் 35,000 டாலர். அதோடு, உணவு மேஜைக்கான கட்டணம் மட்டும் 3 லட்சம் டாலர்களை தாண்டுமாம். இந்த ஃபேஷன் நிகழ்ச்சி சமூகத்தின் மேல்தட்டு பிரிவினருக்கானது என பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஃபேஷன் நிகழ்ச்சியில் அமெரிக்க பெண் எம்.பி அலெக்சாண்ட்ரியா கலந்து கொண்டுள்ளார். பேஷன் ஷோக்களில் பெரும்பாலும் மாடல் அழகிகளும், நடிகைகளும்தான் கலந்துக் கொள்வர். அமெரிக்க இளம் எம்.பி.யான அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ-கார்டஸ் பங்கேற்றதே உலகளவில் வைரலாகியது.
அவர் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் அவர் அணிந்து வந்த உடை தான் அரசியல் பரபரப்பயே ஏற்படுத்தியுள்ளது என்று கூற வேண்டும். அலெக்சாண்ட்ரியா அணிந்து வந்த ஆடையில் 'செல்வந்தர்களுக்கு வரி விதிப்பீர்' (Tax The Rich) என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் பொதுவாகவே செல்வந்தர்களுக்கு வரி விதிக்க வேண்டும் எனும் கோரிக்கை பல ஆண்டுகளாக சமூக செய்யற்பட்டார்களால் கூறப்பட்டு வருகிறது. இளம் எம்.பி அலெக்சாண்ட்ரியாவும் ஃபேஷன் நிகழ்ச்சியில் இப்படி அரசியல் செய்தி சொல்லும் ஆடை அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து கூறிய அலெக்சாண்ட்ரியா, 'எல்லா வகுப்பு மக்கள் மத்தியிலும் இந்தச் செய்தியை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எனது நோக்கம்' என கூறியுள்ளார்.