திருமண ரியாலிட்டி ஷோ பிரபலம்.. "தன் வருங்கால மனைவிக்கு செய்த பதைபதைப்பு காரியம்" - ஃப்ரீசர்ல இருந்தத பார்த்து அதிர்ந்த போலீஸ்
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரனைச் சேர்ந்த பிரபல திருமண ரியாலிட்டி ஷோ பிரபலம் ஒருவர் தன்னுடைய மனைவியை கொன்று அவருடைய இதயம் மற்றும் உறுப்புகளை பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார். இந்த நிலையில் கைதாகி இருக்கிறார்.

இது தொடர்பான சம்பவம் பெரும் பரபரப்பை அந்த நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல திருமண ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு 2019 ஆம் ஆண்டின் வெற்றியாளராக தேர்வு ஆனவரும், முன்னாள் கொலை வழக்கு விசாரணை அதிகாரியுமான Petr Begun தம்முடைய வருங்கால மனைவியாக வலம் வந்த Olha Davydenko, 39 என்கிற பெண்ணை கொலை செய்து இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறார்.
இதுமட்டும் அல்லாது அந்த பெண்ணின் உடல் பாகங்களை உக்கரை நகரின் பல பகுதிகளில் வீசியுள்ளார். இந்தாண்டின் தொடக்கத்தில் Petr Begun-க்கு அறிமுகமான பெண்தான் Olha Davydenko. இந்தப் பெண்ணைதான் கொலை செய்துவிட்டு, அதன் பின்னர் அந்த பெண்ணின் இதயம் மற்றும் பல உறுப்புகளை ஃப்ரீசரில் வைத்து பல நாட்களாக பத்திரப்படுத்தி வந்திருக்கிறார். இந்த பெண்ணின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் முன்னர் இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்ததும், பழகிய ஒரு வாரத்திலேயே அந்த பெண் இந்த நபரின் குடியிருப்புக்கு இடம் பெயர்ந்ததும் தாமதமாகவே தெரிய வந்திருக்கிறது. ஒருவேளை இவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால், இந்த நபருக்கு 15 ஆண்டுகள் வரைக்கும் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
