'விறுவிறுப்பாக போன அழகி போட்டி'... 'கிடைச்ச கேப்பில் சிக்ஸர் அடித்த இளம்பெண்'... இப்படி ஒரு சம்பவத்தை எதிர்பார்க்காத போட்டியாளர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Apr 06, 2021 02:41 PM

அழகி போட்டியின் நடுவே இளம்பெண் பேசிய பேச்சு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The Myanmar beauty queen standing up to the military

தாய்லாந்தில் ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020' என்ற அழகி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த அழகி போட்டியில் மியான்மர் நாட்டை சேர்ந்த அழகி ஹான் லே என்பவர் கலந்து கொண்டார். இதனிடையே மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதை வேளையில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

The Myanmar beauty queen standing up to the military

இந்த சூழ்நிலையில் ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020' அழகி போட்டியில் கலந்து கொண்டு பேசிய ஹான் லே ‘‘இன்று எனது நாட்டில் பல மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஜனநாயகத்துக்காக மியான்மர் மக்கள் சாலைகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மியான்மருக்கு உதவுங்கள். சர்வதேச உதவி மியான்மருக்கு தற்போது அவசியம் தேவைப்படுகிறது. சிறந்த உலகை உருவாக்குவோம்’’ என கூறினார்.

The Myanmar beauty queen standing up to the military

அழகி போட்டியில் ஹான் லே பேசிய பேச்சு அரங்கில் இருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த செய்தி வைரலான நிலையில் பலரும் ஹான் லேவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவரின் இந்த துணிச்சல் பாராட்டுக்குரியது என தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். 22 வயதான உளவியல் மாணவியான ஹான் லே சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு யாங்கூன் நகர வீதிகளில், மியான்மார் ராணுவத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #HAN LAY

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. The Myanmar beauty queen standing up to the military | World News.