'புரட்டி எடுத்த வயிற்று வலி'... 'கழிவறைக்குள் ஓடியவர் கண்ட திகில் காட்சி'... 'இதுவா வயித்ததுக்குள்ள இருந்துச்சு'... அதிர்ந்துபோன டாக்டர்!
முகப்பு > செய்திகள் > உலகம்தீராத வயிற்று வலியால் அவதிப்பட நபர் கழிவறைக்குள் ஓடிய நிலையில், அங்குக் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறையவைத்தது.
தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் Duangchan Dachyodde. 43 வயதாகும் இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இது சாதாரண வயிற்று வலியாக இருக்கலாம் என நினைத்த அவர் தனது அன்றாட வேலைகளைக் கவனித்து வந்துள்ளார். ஆனாலும் அவருக்கு வயிற்று வலி நிற்கவில்லை. இந்நிலையில் திடீரென வயிற்று வலி அதிகரித்த நிலையில், கழிவறைக்குள் சென்றுள்ளார். அப்போது கழிவறையில் அமர்ந்த Duangchan கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவரது வயிற்றிலிருந்து 17 அடி நீளம் கொண்ட, ஏலியனை போன்ற புழு ஒன்று வெளியேறியுள்ளது. இதைப் பார்த்துப் பயந்து போன அவர், உடனே அதை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார். அதைப் பார்த்த மருத்துவர் 17 அடி நீளப் புழுவா உனது வயிற்றிலிருந்தது என ஷாக் ஆனார். பின்னர் அது நாடாப் புழு என்றும், அதனால் உனது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை எனவும் கூறினார். அதன் பிறகு தான் Duangchan நிம்மதி பெருமூச்சு விட்டார்.
இதையடுத்து எதனால் இதுபோன்ற புழு வயிற்றில் வருகிறது என்பது குறித்து விவரித்த மருத்துவர், பச்சை மாமிசம் சாப்பிடுவதால் இதுபோன்ற புழு வயிற்றில் வளரும் என விளக்கினார். அந்த புழுவின் முட்டைகள் மாமிசத்தில் இருக்கும். நாம் மாமிசத்தை நன்கு வேகவைக்காமலோ, அல்லது பச்சையாகவோ சாப்பிடும் போது அவை வயிற்றுக்குள் சென்று புழுவாக மாறும். இதற்கிடையே Duangchanவின் வயிற்றுக்குள் மேலும் புழுக்கள் இருக்கலாம் எனக் கூறியுள்ள மருத்துவர், அவற்றைக் கொல்வதற்கான மருந்துகளையும் கொடுத்துள்ளார்.