விளையாடும்போது 'வாஷிங் மெஷினுக்குள்' ஒளிந்துகொண்ட 'இளம்' பெண்ணுக்கு நேர்ந்த கதி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Apr 22, 2020 08:24 PM

விர்ஜினியாவில் ஒளிந்து விளையாடிய 18 வயது இளம் பெண் வாஷிங் மெஷினுக்குள் சிக்கிக் கொண்டு வெளிவரமுடியாமல் தவித்துள்ளார்.

teen gets struck in washing machine during hide and seek game

தன் உறவுக்கார நண்பர்களுடன் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த அமரி என்கிற 18 வயது இளம் பெண் ஏற்கனவே மெத்தைக்கு அடியிலும் இன்னும் பல இடங்களிலும் ஒளிந்துவிட்டதால், யாருக்கும் தெரியாமல் இருக்க வாஷிங் மெஷினுக்குள் ஒளிந்துகொண்டார். அதன் பின்னர் நண்பர்களால் அமரி வாஷிங் மெஷினுள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு எனினும் வெளியே வரமுடியாமல் தவித்த அமரியை வெளிக்கொண்டுவர, அவரது நண்பர்கள் தீயணைப்புத்துறைக்கு போன் செய்துள்ளனர்.

“உள்ளிருக்கும் போது தன்னை யாராவது வெளியே எடுப்பார்களா?” என்று நினைத்துக் கொண்டிருந்ததாகக் கூறிய அமரியை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை அதிகாரிகள் “என்ன நடந்தது?” என்று கேட்க,  “நான் ஒளிஞ்சு விளையாண்டுக் கொண்டிருந்தேன்” என்று அமரி கூற, அவர்களோ “ஓ.. நீங்க ஜெயிச்சுட்டீங்களா?” என்று கேட்டதுதான் தாமதம், இதுபோன்ற ஒரு மரண பங்கத்தை சந்தித்திராத அமரி, வெடித்து சிரித்ததோடு, “நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்” என்று  சமாதானம் செய்துகொண்டார்.