'ஏழ்மை நிலை'.. படிக்க 'பணமில்லாமல்' தவித்த 18 வயது மாணவிக்கு ‘காத்திருந்த’ இன்ப அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > உலகம்போர்ச்சுகலில் இருந்து 16 வயதில் லண்டனுக்கு குடிபெயர்ந்த 18 வயது மாணவி Victoria Mariyo. ஏழ்மை நிலையில் இருந்த மாணவி Victoriaவுக்கு university of warwick-ல் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது.
எனினும் கல்வி நிறுவனத்துக்கு கட்டணப் பணத்தை செலுத்த கூட பணம் இல்லாத அளவுக்கு, அவரின் ஏழ்மை நிலை நீடித்து வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மடிக்கணினி, தங்குமிடம், பாடப்புத்தகங்களுக்கு தேவையான செலவுகளையும் சமாளிக்க முடியாமல் திணறியுள்ளார் Victoria. இதனால் ஆன்லைன் மூலம் நிதி ஈட்டும் விதமாக ஒரு உதவி கேட்டு பதிவிட்டுருந்தார்.
இந்நிலையில், விக்டோரியாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக பிரபல அமெரிக்க ஆங்கில பாடகி டெய்லர் ஸ்விப்ட் 23 ஆயிரம் பவுண்டுகளை வழங்கியுள்ளார். டெய்லர் ஸ்விப்ட் இதுகுறித்து வெளியிட்ட தனது பதிவில், “ஆன்லைனில் உங்கள் வாழ்க்கைக் கதையை படித்தேன். இத்தனை கஷ்டமான சூழ்நிலையிலும், உங்கள் அர்ப்பணிப்பு என்னை ஈர்த்தது” என்று குறிப்பிட்டுள்ளார். டெய்லர் ஸ்விப்ட் இப்படி தொடர்ச்சியாக பலருக்கும் தன்னாலான உதவிகளை அநாயசமாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
விக்டோரியா தனது பதிவில், “நான் பிரிட்டனுக்கு வரும் வரையில் எனக்கு ஆங்கிலமே பேச தெரியாது. எனது கதை தனித்துவமானது இல்லை என்றாலும், கணிதவியலாளராக வேண்டும் என்பது என் கனவு. ஊக்கப்படுத்தியவர்களுக்கு நன்றி” என குறிப்பிட்டிருந்தார்.