‘மன்னிப்பு கேட்டுக்குறோம்’!.. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘டேனிஷ் சித்திக்’ இறப்பு.. தாலிபான் அமைப்பு பரபரப்பு விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போரை படம்பிடிக்க சென்ற இந்தியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் உயிரிழந்தது குறித்து தாலிபான் அமைப்பு விளக்கம் கொடுத்துள்ளது.

ஆஃப்கானிஸ்தானின் ஸ்பின் போல்டக் எனும் இடத்தில் அரசு படைகளுக்கும், தாலிபான்களுக்கும் இடையே நடக்கும் போரை புகைப்படம் எடுப்பதற்காக இந்தியாவை சேர்ந்த ராய்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவன புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் (Danish Siddiqui) சென்றிருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக போராட்ட களத்தில் டேனிஷ் சித்திக் உயிரிழந்தார். புலிட்சர் விருது பெற்ற புகைப்பட கலைஞர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கனி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோர் டேனிஷ் சித்திக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். தற்போது டேனிஷ் சித்திக்கின் உடல் ரெட் கிராஸ் அமைப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை இந்தியா கொண்டு வர தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரித்துள்ளது.
இந்த நிலையில் புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் உயிரிழந்தது தொடர்பாக தாலிபான் அமைப்பு விளக்கம் கொடுத்துள்ளது. இதுகுறித்து CNN-News 18 சேனலுக்கு தாலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித் (Zabiullah Mujahid) அளித்த பேட்டியில், ‘யார் சுட்டதில் அவர் உயிரிழந்தார் என தெரியவில்லை. டேனிஷ் சித்திக்கின் மறைவுக்காக மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறோம். போர்களத்துக்கு வரும் செய்தியாளர்கள் எங்களிடம் தகவல் தெரிவித்தால்தான், எங்களால் உரிய பாதுகாப்புகளை வழங்க முடியும்’ என அவர் கூறியுள்ளார்.
