“எங்க இருந்துதான் நமக்குன்னே புதுசு புதுசா கிளம்பி வருமோ?”.. விஞ்ஞானிகளை உறைய வைத்த ‘பூமராங் பூகம்பம்!’
முகப்பு > செய்திகள் > உலகம்நிலநடுக்க அளவைமானி தரவு மூலம் கடலுக்கடியில் உலகில் முதன்முறையாக பூமராங் பூம்பூம் என்கிற ஒரு புதிய நிகழ்வை விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததுடன் அதிர்ந்துள்ளனர்.
2016ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் மேற்கு ஆப்பிரிக்காவில் லைபீரியா பகுதிக்கு அருகே கடலின் அடியில் உண்டான இந்த அதிசய பூகம்பத்தின் போது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக இது பதிவானது.
இந்த பூகம்பம் பற்றி தென் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க டெக்டானிக் பிளேட்களை ஆராய்ந்த போது முதலில் நிலநடுக்க அதிர்வலை வடகிழக்கு திசை நோக்கி வேகமாக சென்று பின்னர் அதே திசையில் திரும்பி அதிர்வலை எங்கு உண்டானதோ அந்த தொடக்க இடத்திற்கே வந்து சேர்ந்தது தெரியவந்தது. இப்படி அசுர வேகத்தில் புறப்பட்டு எந்த ஒரு புற தாக்கமுமின்றி தொடங்கிய இடத்துக்கே திரும்பியதால் இதற்கு பூமராங் பூகம்பம் என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
ஆனால் அவ்வாறு திரும்பும்போது, இந்த பூமராங் பூகம்பம், தான் திரும்பும் நிலப்பகுதியை ஒட்டி கற்பனைக்கும் எட்டாத சேதங்களை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். நியூயார்க்கில் இருந்து லண்டன் செல்லும் தூரத்தை 18.5 நிமிடங்களில் கடக்கக் கூடியதாக, இந்த அதிர்வு அலைகளின் வேகம் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சாதாரணமாகவே கூம்பு வடிவத்தில் குத்திக் கிழித்துக் கொண்டு செல்லும் அதிர்வலைகள்தான் பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்தையும் துவம்சம் செய்து தூக்கிப் போடப்படுவதால் கடும் சேதம் உண்டாகிறது. இப்படி இருக்கும் சூழலில் ஓரிடத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் பூகம்பம் அதேபாணியில் சென்ற வேகத்திலேயே திரும்பி வந்தால் என்ன ஆகும் என்று இந்த பூமராங் பூகம்பத்தால் விஞ்ஞானிகள் அதிர்ந்து போய் உள்ளனர்.