'லூசான சேஃப்டி பார்'.. 'திசை மாறிய ரைடர்'.. 'ஒரு நொடியில் நடந்தேறிய'.. உறையவைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Dec 04, 2019 04:48 PM
தாய்லாந்தின் லோப்-புரி என்கிற இடத்தில் செயல்பட்டு தீம் பார்க்கில்தான் இந்த விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது.
தாய்லாந்தில் திருவிழாவினை முன்னிட்டு, கரீபியன் கடற் கொள்ளையர்கள் எனப்படும் பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் செட்டப்பில் தீம் பார்க் வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் ஆர்வமாக திருவிழாவைக் கொண்டாடினர். அதில் சிலர் பயணித்த பெரிய ரைடர் ஒன்றின் சேஃப்டி பார் தளர்ந்ததால், ரைடர் திடும்மென எதிர்த் திசையில் சுற்றியதால், பலரும் திமுதிமுவென எகிறி, கீழே சரிந்து விழுந்தனர்.
இதில் சிறுவர்கள் உட்பட சிலருக்கு படுகாயம் ஏற்பட்டது. விபத்தில் இருந்து அனைவரும் பிழைத்து நலமுடன் இருக்கின்ற சூழலில், ஆபரேட்டர் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றதால், இந்த ரைடர் பற்றி ஒன்றுமே தெரியாத அவரது நண்பர் ஆபரேட் செய்ததால் இந்த விளைவு உண்டானதாக போலீஸாரிடத்திம் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.