‘பெண் மீது அடுக்கடுக்காக குவிந்த 399 புகார்கள்!’.. ‘காரணம் இப்படி ஒரு கதைவிட்டதுதான்!’.. பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Oct 14, 2020 08:26 PM

38 மில்லியன் டாலர்கள் தனக்குக் கிடைக்க இருப்பதாக கதைவிட்ட பெண்ணை நம்பி கனேடியர்கள் பலர் ஏமாந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

queen of cons, alberta woman sentenced for fraud

Jane Moore (45) என்கிற பெண், தான் கால்கரியில் உள்ள ஒரு செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்றும், தனக்கு 38 மில்லியன் டாலர்கள் குடும்பச் சொத்து கிடைக்க இருப்பதாகவும் கதை விட்டதை நம்பி மக்கள் பலரும் அவருக்கு கடன் கொடுத்தனர். இதை வாங்கிக் கொண்ட  Jane Moore பல ஆயிரம் டாலர்கள் மோசடி செய்துள்ளார்.

இதனால் Jane மீது 399 குற்றச்சாட்டுகள் பதியப்பட்டன, ஆனால் அவரோ 5000 டாலர்கள் மோசடி செய்த ஒரே ஒரு குற்றத்தை மட்டும் ஒப்புக்கொண்டார். முன்னதாக அவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டன. இந்நிலையில் மீண்டும் மூன்று மாதங்கள் வீட்டுச் சிறையிலும், ஆறு மாதங்கள் கண்காணிப்பிலும் வைக்கப்பட உள்ளார் Jane.

அதுமட்டுமல்லாமல் 40,000 டாலர்கள், தன்னால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு Jane திருப்பி செலுத்த வேண்டும். ஏற்கனவே 17 ஆண்டுகளுக்கு முன் 77 மோசடி , திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்காக 2 ஆண்டுகள் சிறைத்யில் இருந்தவர்தான் Jane என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Queen of cons, alberta woman sentenced for fraud | World News.