'பண்டோரா பேப்பர்ஸ் விவகாரம்'... 'அதிரவைத்த சச்சினின் பெயர்'... 'இப்போ இவங்களும் சிக்கிட்டாங்களா'... பிரபலத்தின் ரகசிய காதலி பெயரில் கோடிக்கணக்கில் சொத்து!
முகப்பு > செய்திகள் > உலகம்பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் கோடிக் கணக்கில் சொத்துகளைச் சட்ட விரோதமாக வாங்கிக் குவித்த இந்தியா, பாகிஸ்தான் உள்பட 91 நாடுகளின் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், அரசியல் தலைவர்களின் பெயர்களையும், வெளியிடப்படாத ஆவணங்களையும் பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐசிஐஜே சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு இந்த பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்களை வெளியிட்டு அதிரவைத்தது. பிபிசி, தி கார்டியன் நாளேடு, இந்தியாவில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 150 ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் புலனாய்வு செய்து இந்த ஆவணங்களை வெளியிட்டு உள்ளனர்.
இதில் 1.90 கோடி ரகசியக் கோப்புகள் இருக்கும் நிலையில், இந்தியாவின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புதினின் ரகசிய காதலிக்கு வெளிநாடுகளில் மில்லியன் கணக்கிலான சொத்துக்கள் இருப்பதாக Pandora Papers அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
46 வயதான Svetlana Krivonogikhக்கு வெளிநாடுகளில் 100 மில்லியன் டாலர் அளவுக்குச் சொத்துக்கள் இருப்பதாக அந்த ஆவணங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் துணை மேயராக இருந்த காலத்திலிருந்தே இருவருக்கும் ரகசிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. மிகவும் சாதாரண குடும்ப பின்னணி கொண்ட Svetlana திடீரென சொகுசு பங்களாவில் குடியேறியது, தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப் பாய்மர படகு வாங்கியது உட்படப் பல விஷயங்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
கடந்த 2003ம் ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்று ஆடம்பர பங்களா ஒன்றை Svetlanaக்கு பரிசளித்தது. அதைத் தொடர்ந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சொகுசு குடியிருப்பு ஒன்றை வாங்கியதாகவும், பல ஆடம்பர பொருட்களை வாங்கி குவித்ததாகவும் அந்த ஆவணங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மற்ற செய்திகள்
